நாமக்கல்
ரூ.59 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
|நாமக்கல்லில் 2,700 பருத்தி மூட்டைகள் ரூ.59 லட்சத்துக்கு ஏலம் போனது.
பருத்தி மூட்டைகள்
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நாமக்கல்லில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் நாமக்கல், திருச்செங்கோடு, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், மோகனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
ரூ.59 லட்சத்திற்கு ஏலம்
அதை சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
இதனிடையே ஆர்.சி.எச். ரக பருத்தி விலை ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 989 முதல் அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 149 வரை ஏலம் போனது. அதேபோல் கொட்டு ரக பருத்தி குறைந்தபட்சமாக ரூ.3 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.6,050 வரை ஏலம் போனது. நேற்று 2,700 பருத்தி மூட்டைகள் ரூ.59 லட்சத்திற்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.