< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
கொங்கணாபுரத்தில் ரூ.90 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
|1 Jan 2023 4:09 AM IST
கொங்கணாபுரத்தில் ரூ.90 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
எடப்பாடி:
கொங்கணாபுரத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 3 ஆயிரத்து 600 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அவை 800 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டன. ஏலத்தில் பி.டி. ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 200 முதல் ரூ.7 ஆயிரத்து 550 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 900 முதல் ரூ.7 ஆயிரத்து 800 வரையும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 700 முதல் ரூ.4 ஆயிரத்து 600 வரையும் விற்பனையானது. மொத்தம் ரூ.90 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.