< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
கொங்கணாபுரத்தில் ரூ.35 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
|30 Oct 2022 12:30 AM IST
கொங்கணாபுரத்தில் ரூ.35 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த 1,500 பருத்தி மூட்டைகள் 500 லட்டுகளாக பிரிக்கப்பட்டு, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி ரக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 389 முதல் ரூ.8 ஆயிரத்து 919 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 499 முதல் ரூ.4 ஆயிரத்து 999 வரையிலும் விற்பனையானது. 1,500 பருத்தி மூட்டைகள் மொத்தம் ரூ.35 லட்சத்துக்கு ஏலம் போனது. அடுத்த பருத்தி ஏலம் வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளதாக கூட்டுறவு துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.