< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
கொங்கணாபுரத்தில் ரூ.75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
|4 Sept 2022 2:11 AM IST
கொங்கணாபுரத்தில் ரூ.75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
எடப்பாடி:
கொங்கணாபுரம் பகுதியில் கூட்டுறவு வேளாண் விற்பனை மையம் இயங்கி வருகிறது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஏலத்துக்கு மொத்தம் 2 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இவைகள் 850 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 750 முதல் ரூ.10 ஆயிரத்து 389 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 300 முதல் ரூ.7 ஆயிரத்து 200 வரையிலும் விற்பனையானது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.