< Back
மாநில செய்திகள்
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டால் ரூ.11,839-க்கு ஏலம்
திருவாரூர்
மாநில செய்திகள்

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டால் ரூ.11,839-க்கு ஏலம்

தினத்தந்தி
|
24 Aug 2022 11:27 PM IST

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.11,839-க்கு ஏலம் போனது.

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.11,839-க்கு ஏலம் போனது.

பருத்தி ஏலம்

திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் ஏலத்துக்கு வைத்திருந்தனர்.

அதிகபட்ச விலை

இந்த ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். அதுசமயம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச் சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர். இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில் முருகன், மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.

இதில் அதிகபட்சமாக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ.11 ஆயிரத்து 839-க்கு ஏலம் போனது. குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரத்து 299, சராசரியாக ரூ.11 ஆயிரத்து 389-க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.1 கோடியே 23 லட்சத்துக்கு 87 ஆயிரம் மதிப்பில் பருத்தி விற்பனையானது.

மேலும் செய்திகள்