< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
பூலாம்பட்டியில் ரூ.14 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
|23 Aug 2022 3:05 AM IST
பூலாம்பட்டியில் ரூ.14 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் கொண்டு வந்த 450 பருத்தி மூட்டைகள் 250 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 599 முதல் ரூ.11 ஆயிரத்து 750 வரை விற்பனையானது. மொத்தம் ரூ.14 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது என்றும், அடுத்த ஏலம் வருகிற 29-ந் தேதி நடைபெறும் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.