சேலம்
ரூ.2.10 கோடிக்கு பருத்தி ஏலம்
|கொங்கணாபுரத்தில் ரூ.2.10 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
எடப்பாடி
கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த 6 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகள், 1,500 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு கூட்டுறவு துறை அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் ஈரோடு, பெருந்துறை, கோவை, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பருத்தியை மொத்த கொள்முதல் செய்தனர். பொது ஏலத்தில் பி.டி.ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ.9, 650 முதல் ரூ.12 ஆயிரத்து 509 வரையிலும், சுரபி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 507 முதல் ரூ.12 ஆயிரத்து 110 வரையிலும் விற்பனையானது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை ஆனது.