< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
கொங்கணாபுரத்தில் ரூ.5 கோடிக்கு பருத்தி ஏலம்
|14 Aug 2022 4:20 AM IST
கொங்கணாபுரத்தில் ரூ.5 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
எடப்பாடி:
கொங்கணாபுரத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் பருத்தி, எள், தேங்காய் பருப்பு, நிலக்கடலை போன்றவை ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 12 ஆயிரம் மூட்டை பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்தனர். அவை 1,900 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு அலுவலர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டன. பி.டி. ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 500 முதல் ரூ.12 ஆயிரத்து 300 வரையும், சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 489 முதல் ரூ.11 ஆயிரத்து 899 வரையும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 கோடியே 90 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.