< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
தொடர் கனமழையால் கொங்கணாபுரத்தில் பருத்தி ஏலம் ஒத்திவைப்பு-இன்று நடக்கிறது
|7 Aug 2022 12:39 AM IST
தொடர் கனமழையால் கொங்கணாபுரத்தில் பருத்தி ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஏலம் இன்று நடக்கிறது
எடப்பாடி:
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை தொடங்கி மாலை வரை தொடர்ந்து இந்த பகுதியில் விட்டு, விட்டு கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் பருத்தி எடை போடுதல் மற்றும் விற்பனை விவரங்கள் அறிவித்தல் உள்ளிட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்ட நிலையில், நேற்று நடைபெறுவதாக இருந்த பருத்தி ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டது.
நேற்று ஒத்திவைக்கப்பட்ட பருத்தி ஏலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பருத்தி மூட்டைகள் இன்று ஏலம் விடப்பட்டு, விலைப்புள்ளிகள் அறிவிக்கப்படும் என சம்பந்தப்பட்ட கூட்டுறவு அலுவலர்கள் தெரிவித்தனர்.