< Back
மாநில செய்திகள்
ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11 ஆயிரத்து 79-க்கு ஏலம்
திருவாரூர்
மாநில செய்திகள்

ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11 ஆயிரத்து 79-க்கு ஏலம்

தினத்தந்தி
|
31 July 2022 11:14 PM IST

ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11 ஆயிரத்து 79-க்கு ஏலம் நடந்தது.

மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்பட்டது. கண்காணிப்பாளர் செல்வராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 40 விவசாயிகள் 125 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். ஏலம் எடுப்பதற்காக கும்பகோணம், விருத்தாசலம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.11 ஆயிரத்து 79-க்கும், குறைந்தபட்சமாக ரூ.9 ஆயிரத்து 869-க்கும் பருத்தி ஏலம் போனது.

மேலும் செய்திகள்