< Back
மாநில செய்திகள்
மூங்கில்குடியில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9,219-க்கு ஏலம்
திருவாரூர்
மாநில செய்திகள்

மூங்கில்குடியில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9,219-க்கு ஏலம்

தினத்தந்தி
|
14 July 2022 6:09 PM IST

மூங்கில்குடியில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9,219-க்கு ஏலம் போனது.

மூங்கில்குடியில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9,219-க்கு ஏலம் போனது.

பருத்தி ஏலம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மூங்கில்குடியில் பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்து உள்ளது. இங்கு நேற்று பருத்தி ஏலம் நடந்தது. அப்போது பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தி பஞ்சுகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.

750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டுவந்த 3 ஆயிரம் குவிண்டால் பருத்தி ஏலத்துக்கு வைக்கப்பட்டு இருந்தது. திருவாரூர் விற்பனை கூட செயலாளர் சரசு, பூந்தோட்டம் விற்பனை கூட கண்காணிப்பாளர் முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் ஏலம் நடந்தது.

அதிகபட்ச விலை...

திருப்பூர், கோவை, பண்ருட்டி, கும்பகோணம், கொங்கனாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பருத்தியை ஏலத்தில் எடுக்க வந்திருந்தனர்.

இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.9,219-க்கு ஏலம் போனது. குறைந்தபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.7,129 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்