< Back
மாநில செய்திகள்
பருத்தி விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பருத்தி விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம்

தினத்தந்தி
|
6 July 2022 11:51 PM IST

முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

மிளகாய், பருத்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத்தை விட மிளகாய், பருத்தி உள்ளிட்ட விவசாயம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை பருத்தி சீசன்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய தேரிருவேலி, மல்லல், வடக்கு மல்லல், தாழியாரேந்தல், மட்டியாரேந்தல், காஞ்சிரங்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பருத்தி விவசாயம் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் அதிக விலைக்குபோன பருத்தி விலை குறைந்து 1 கிலோ ரூ.65-க்கு மட்டுமே விலை போவதால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இதுபற்றி முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தை சேர்ந்த விவசாயி சத்தியமூர்த்தி கூறியதாவது:- இந்த ஆண்டு பருத்தி விவசாய சீசன் தொடக்கத்தில் ஒரு கிலோ பருத்தி ரூ.120 வரை விலை போனது.

அதன் பின்னர் பருத்தி விலை குறைய தொடங்கியது. தற்போது ஒரு கிலோ பருத்தி ரூ.65-க்கு தான் விலை போகிறது. இந்த அளவுக்கு பருத்தியின் விலை குறையும் என்று எதிர்பார்க்கவில்லை.

ஏமாற்றம்

பருத்தி விளைச்சல் அதிகம் உள்ளதால் பஞ்சு கம்பெனிகளுக்கு அதிகம் அனுப்பப்பட்டு உள்ளதால் பருத்தியின் விலையை குறைத்து உள்ளார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் நன்றாக இருந்தும் விலை குறைந்துள்ளது ஒரு ஏமாற்றம் தான். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்