மாநில செய்திகள்
வாடகை கட்டாத மாநகராட்சி கடைகளுக்கு சீல்
திருச்சி
மாநில செய்திகள்

வாடகை கட்டாத மாநகராட்சி கடைகளுக்கு 'சீல்'

தினத்தந்தி
|
17 Jun 2023 8:22 PM GMT

வாடகை கட்டாத மாநகராட்சி கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகை செலுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மண்டலம் 3-க்கு உட்பட்ட பொன்மலைபட்டி பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. உதவி ஆணையர் ரமேஷ்குமார் உத்தரவின்படி உதவி வருவாய் அலுவலர் தாமோதரன், வருவாய் ஆய்வாளர்கள் ரமேஷ், பாலமுருகன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கடைகளை பூட்டி 'சீல்' வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்