< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
வரி செலுத்தாத 130 கடைகளுக்கு 'சீல்' மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
|18 Aug 2022 8:46 AM IST
வரி செலுத்தாத 130 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
சென்னை பிராட்வே ரத்தன் பஜாரில் இருந்து பேசின் பிரிட்ஜ் சாலை வரை மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான சாலையோர கடைகள் உள்ளன. இதில் 160 கடைகள் வாடகை மற்றும் நிலுவை வரி தொகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் சுமார் 30 கடைகளின் உரிமையாளர்கள், வரியை உடனடியாக செலுத்தி விட்டனர். வரி செலுத்தாத மீதமுள்ள 130 கடைகளுக்கு நேற்று காலை வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனாலும் அந்த கடைக்காரர்கள் வரி செலுத்தாமலேயே இருந்தனர்.
இதையடுத்து மாநகராட்சி சார்பில், துணை வருவாய் துறை அதிகாரிகள் நீதிபதி, ரங்கநாதன், முருகேசன், உரிமம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், வரி மதிப்பீட்டாளர் ரகமதுல்லா ஆகியோர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வரி செலுத்தாத 130 கடைகளையும் பூட்டி 'சீல்' வைத்தனர்.