< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
மாநகராட்சி 5-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் ஆணையாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு
|6 July 2023 2:58 AM IST
மாநகராட்சி 5-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என ஆணையாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரனிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட எஸ்.கே. இந்திரன் வீதி, செந்தூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் எங்கள் பகுதியில் தார் ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரும் சிரமமாக உள்ளது. எனவே எங்கள் பகுதியில் தார் ரோடு, கழிவுநீர் சாக்கடை கால்வாய் வசதி மற்றும் தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.