< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
பொதுமக்களை அச்சுறுத்திய தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்
|6 July 2023 1:24 AM IST
பொதுமக்களை அச்சுறுத்திய தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
திருச்சி மாநகராட்சி சாலைகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. மேலும் திடீரென்று சாலையின் குறுக்கே பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்தின. எனவே இந்த நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்டனர். அதன் பேரில் நேற்று கருமண்டபம் ஐ.ஓ.பி நகர், எஸ்.எஸ்.நகர், திருநகர், குறிஞ்சி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பிடித்தனர். மேலும் மாநகரில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.