< Back
மாநில செய்திகள்
கடலூரில் பட்டாசு வெடித்ததில் மாநகராட்சி துணை மேயர் காயம்
கடலூர்
மாநில செய்திகள்

கடலூரில் பட்டாசு வெடித்ததில் மாநகராட்சி துணை மேயர் காயம்

தினத்தந்தி
|
3 March 2023 6:45 PM GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நேற்று கடலூரில் பட்டாசு வெடித்த போது, மாநகராட்சி துணை மேயர் காயமடைந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தி.மு.க. கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பல்வேறு இடங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதன்படி நேற்று கடலூர் அண்ணா பாலம் அருகில் உள்ள சிக்னலில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடுவதற்காக திரண்டனர்.

துணை மேயர் காயம்

தொடர்ந்து அவர்கள் நாட்டு பட்டாசுகளை வெடித்தனர். அப்போது ஒரு பட்டாசு விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான தாமரைச்செல்வன் தலையில் விழுந்து வெடித்தது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. இதை பார்த்த அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர். பின்னர் காயமடைந்த தாமரைச்செல்வன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதற்கிடையில் தொடர்ந்து மற்ற நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்