< Back
மாநில செய்திகள்
சிவகாசியில் 12 பழைய கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு
விருதுநகர்
மாநில செய்திகள்

சிவகாசியில் 12 பழைய கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு

தினத்தந்தி
|
7 Sept 2023 1:58 AM IST

12 பழைய கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சிவகாசி,

தமிழகத்தில் சேதமடைந்த அல்லது பாழடைந்த நிலையில் உள்ள பொது மற்றும் அரசு கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றை பாதுகாப்பாக இடிக்க ஏற்பாடு செய்யுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் பழுதடைந்த கட்டிடங்களை அடையாளம் காணும் பணிகள் கடந்த 2 நாட்களாக கமிஷனர் சங்கரன் உத்தரவின் பேரில் நடைபெற்றது. இதில் மாரிமுத்து தெருவில் உள்ள 2 சுகாதார வளாகங்கள், முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சுகாதார வளாகம், மாநகராட்சி ஏ.வி.டி.பள்ளி வளாகத்திற்குள் உள்ள 2 பழைய கட்டிடங்கள் என 14. பழைய பழுதடைந்த கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 12 கட்டிடங்களை பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்