< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
கொரோனா தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
|22 July 2022 2:25 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வப்போது சிறப்பு மெகா தடுப்பூசி முகாமும் நடந்தப்படுகின்றது. 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை மாவட்டமாக காஞ்சீபுரம் திகழ்கிறது. இருந்தாலும் 2-வது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவே எட்டியுள்ளது. இதுவரை 2,03,453 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போடப்பட்டிருக்க வேண்டும். எனவே, பொதுமக்கள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தபட்டுள்ள 1,059 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.