< Back
மாநில செய்திகள்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை நடவடிக்கை
மாநில செய்திகள்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை நடவடிக்கை

தினத்தந்தி
|
22 April 2023 9:44 PM IST

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

திண்டுக்கல்,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில், இன்று முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சோதனை சாவடிகளில் சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மேலும் செய்திகள்