< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 400 பேருக்கு கொரோனா பரிசோதனை
சென்னை
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 400 பேருக்கு கொரோனா பரிசோதனை

தினத்தந்தி
|
27 Dec 2022 2:03 AM IST

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 400 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

சென்னை விமான நிலையம்

சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்பட பல நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கடந்த 24-ந் தேதி முதல் ரேண்டம் அடிப்படையில் 2 சதவீதம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சென்னை விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளுக்கும் தட்பவெப்ப சோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று அறிகுறியுடன் யாராவது தென்பட்டால் அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

400 பேருக்கு பரிசோதனை

அத்துடன் விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் குறித்த விவரங்கள் தமிழக அரசு சார்பில் முழுமையாக சேகரிக்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் கடந்த 24-ந் தேதியில் இருந்து இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த சுமார் 15 ஆயிரம் பயணிகளுக்கு தட்பவெப்ப சோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் சுமார் 400 பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் யாருக்கும் எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்