< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொரோனா பரவல்- அச்சம் தேவையில்லை... அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
|4 April 2023 4:52 PM IST
கொரோனா பரவலால் மக்கள் அச்சமடைய வேண்டாமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை,
இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்து உள்ளது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், கொரோனா பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.