< Back
மாநில செய்திகள்
மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா.... விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
மாநில செய்திகள்

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா.... விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

தினத்தந்தி
|
10 Jun 2022 4:49 PM IST

மதுரை விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை,

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மதுரை விமானநிலையத்தில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரை ஆய்வு செய்தார்.

நோய் தடுப்பு பணி, பரிசோதனை மையம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கான மருத்துவ பரிசோதனை, மருத்துவ பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். மதுரை மாவட்ட சிறப்பு அதிகாரி உள்ளிட்டோர் ஆய்வின் போது அமைச்சருடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்