< Back
மாநில செய்திகள்
ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா

தினத்தந்தி
|
10 Jun 2022 10:27 PM IST

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பரவல்

குமரி மாவட்டத்தில் இதுவரை 79 ஆயிரத்து 937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே சமயம் தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக தொற்று பரவி வருகிறது. கடந்த வாரத்தில் 2 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் மீண்டும் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தினமும் 350 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை பணியாளர்கள் இந்த பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த பரிசோதனையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முஞ்சிறை ஒன்றியத்தில் 8 பேரும், நாகர்கோவில் மாநகராட்சியில் ஒருவரும் என மொத்தம் 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை அந்தந்த பகுதிகளை சேர்ந்த சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் அவ்வப்போது கண்காணித்து வருகிறார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கு கிருமிநாசினி தெளிப்பது மற்றும் பிளிச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டில் 47 வயது இளம்பெண் ஒருவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

----

மேலும் செய்திகள்