திண்டுக்கல்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
|திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் காமராஜ்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அன்பரசு, செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டதில் விதிமீறல் என கூறி பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். அரசால் கடன் தள்ளுபடி செய்யப்படும் போது பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ஆகியவற்றுக்கான தொகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வழங்க வேண்டும். ரேஷன் கடை, சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.