< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குன்னூரில் 6-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ - ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்
|17 March 2024 6:48 PM IST
காட்டுத்தீயில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் மரங்கள் மற்றும் செடிகள் எரிந்து நாசமாகியுள்ளன.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பாரஸ்ட் டேல் பகுதியில் கடந்த 6 நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. நாளுக்கு நாள் தீ பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகியுள்ளன.
இதில் பல ஆண்டுகள் பழமையான மரங்களும், மூலிகைச் செடிகளும் எரிந்து நாசமாகியுள்ளன. இதனிடையே தீயை அணைக்கும் பணிக்காக சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக அருகில் உள்ள ரேலியா அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.