< Back
மாநில செய்திகள்
சாத்தூரில் சமையல் எரிவாயு கசிவால் வீட்டில் தீவிபத்து - முதியவர் உடல் கருகி பலி
மாநில செய்திகள்

சாத்தூரில் சமையல் எரிவாயு கசிவால் வீட்டில் தீவிபத்து - முதியவர் உடல் கருகி பலி

தினத்தந்தி
|
4 Jan 2023 9:15 AM IST

சாத்தூரில் சமையல் எரிவாயு கசிவால் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டு முதியவர் உடல் கருகி உயிரிழந்தார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் சிவசாமி(வயது61). இவர் சேவு கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார் உடல் நலக்குறைவால் சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் சமையல் சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

இதை அறியாமல் சிவசாமி அடுப்பை பற்ற வைத்துள்ளார். இதில் தீ விபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூட்டிய கதவை உடைத்து உள்ளே சென்ற பொழுது அவர் தீயில் கருகிய நிலையில் இருந்தார்.

இந்த விபத்தில் சிவசாமி உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூர் டவுன் போலீசார் சிவசாமி உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்