சேலம்
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு
|சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சேலத்தில் ரூ.1,036.50 விற்பனை ெசய்யப்படுகிறது.
சேலம்:
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சேலத்தில் ரூ.1,036.50 விற்பனை ெசய்யப்படுகிறது.
சமையல் கியாஸ் சிலிண்டர்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 7-ந் தேதி ரூ.50 அதிகரிக்கப்பட்டது. இதனால் அதன் விலை ஆயிரம் ரூபாயை தாண்டியது. சேலத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1033.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மீண்டும் உயர்த்தி உள்ளன.
ரூ.1,036.50-க்கு விற்பனை
அதன்படி, சேலத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1,036.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வணிக சிலிண்டர் விலை ரூ.8.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.2,498.50-க்கு விற்கப்பட்ட வணிக சிலிண்டர் ரூ.2,507-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.