< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
அடுப்பு இல்லாமல் சமையல் போட்டி
|30 Aug 2023 12:17 AM IST
அடுப்பு இல்லாமல் நடந்த சமையல் போட்டியில் மாணவிகள் பங்கேற்றனர்.
சேத்துப்பட்டு
அடுப்பு இல்லாமல் நடந்த சமையல் போட்டியில் மாணவிகள் பங்கேற்றனர்.
பெரணமல்லூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை தலைமை தாங்கினார். பெரணமல்லூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் ரேவதி வரவேற்றார். தலைமை ஆசிரியை மீனாட்சி முன்னிலை வகித்தார்.
இதில் அடுப்பு இல்லாமல் மாணவிகள் 43 வகை சத்தான பழங்கள், காய்கறி, கிழங்குகள் மூலமாக ஜூஸ் வகைகள் தயாரித்தனர். முதல் 3 இடங்களை பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மாணவிகள் தயாரித்த ஜூஸ் அனைவருக்கும் வழங்கப்பட்டது.