< Back
மாநில செய்திகள்
வாகனம் மோதி சமையல் தொழிலாளி பலி
தேனி
மாநில செய்திகள்

வாகனம் மோதி சமையல் தொழிலாளி பலி

தினத்தந்தி
|
16 March 2023 6:45 PM GMT

தேனி அல்லிநகரத்தில் வாகனம் மோதி சமையல் தொழிலாளி பலியானார்.

தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 48). சமையல் தொழிலாளி. கடந்த 8-ந் தேதி இவர், பெரியகுளம் தாமரைக்குளம் பிரிவு அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு சமையல் பணிக்காக வந்தார். அங்கு அவர் கடைக்கு சென்றுவிட்டு தேனி- பெரியகுளம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் முனியாண்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்