< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி சமையல்காரர் பலி
|21 Oct 2023 6:33 PM IST
செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சமையல்காரர் பலியானார்.
செய்யாறு
செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சமையல்காரர் பலியானார்.
வெம்பாக்கம் தாலுகா பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 41) சமையல் வேலை செய்து வந்தார். நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தினை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் லோகேஸ்வரன் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும், டிரைவரையும் வலைவீசி தேடி வருகின்றார்.