தர்மபுரி
எருமியாம்பட்டி இ.ஆர்.கே. கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
|எருமியாம்பட்டி இ.ஆர்.கே. கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
அரூர்:
அரூர் அடுத்த எருமியாம்பட்டியில் உள்ள இ.ஆர்.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 10-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் சக்தி வரவேற்று ஆண்டு அறிக்கை வாசித்தார். இதையடுத்து கல்லூரியில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் படிப்புகளை நிறைவு செய்த 583 மாணவிகளுக்கு பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பேராசிரியர் குணசேகரன் பட்டங்களை வழங்கி பேசினார்.
பின்னர் பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த முதுகலை கணிதவியல் துறை மாணவிகள் காவியா, அருணா, கிருத்திகா, தாவரவியல் துறை மாணவிகள் பிரவினா, தேவிகா, இயற்பியல் துறை மாணவி செல்வ பிரியா மற்றும் இளங்கலை கணிதவியல் துறை மாணவி கலையரசி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் இ.ஆர்.கே. கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.