தூத்துக்குடி
பட்டமளிப்பு விழா
|எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது
கோவில்பட்டி:
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார்- மாரியம்மாள் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் எஸ்.கண்ணன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஆர்.செல்வராஜ் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் இதயம் வீ.ஆர்.முத்து கலந்து கொண்டு இளங்கலை மாணவ- மாணவிகள் 222 பேருக்கும், முதுகலை மாணவர்கள் 15 பேருக்கும் பட்டம் வழங்கி பேசினார். பட்டங்கள் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழாவில் நாடார் உறவின்முறை சங்கத்தை துணை தலைவர் எம்.செல்வராஜ், பொருளாளர் டி.ஆர். சுரேஷ் குமார், கல்லூரி பொருளாளர் கே.பி.எம். மகேஷ், நிர்வாக குழு உறுப்பினர்கள் எம். செல்வகணேஷ், பாஸ்கரன், ஜெ.ரமேஷ், கே. காமராஜ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.