திருநெல்வேலி
பட்டமளிப்பு விழா
|பட்டமளிப்பு விழா நடந்தது
திசையன்விளை:
திசையன்விளை மனோ கல்லூரியில் 6-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாத்துரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற 100 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் கல்லூரியின் வணிகவியல் துறை தலைவி ஜெயஸ்ரீ, ஆங்கிலத்துறை தலைவி தமிழ்செல்வி, கணிதவியல் துறை தலைவர் ராஜேஷ், தமிழ் துறை தலைவி தணிகைச் செல்வி, கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் சந்திரசேகர் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் யுகேஷ், கல்லூரியின் தொலைதூர கல்வி அலுவலர் ஒயிட்டன் சகாயராஜ், அழகேஷ்குமார் மற்றும் அலுவலக ஊழியர்கள், மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.