< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
|25 May 2022 3:22 PM GMT
பர்கூர் அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
பர்கூர்:
பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியின் முதல்வர் அனுராதா கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். இதில் கல்லூரி முதல்வர் பிரமிளா பட்டமளிப்பு விழா அறிக்கையை வாசித்தார். அனைத்து துறைத்தலைவர்களும் தங்களது துறையில் பட்டம் பெறும் மாணவிகளை அறிமுகப்படுத்தி வைத்தனர். பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தங்கப்பதக்கம் பெற்ற ஒரு மாணவி மற்றும் தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவிகள் 2 பேர் உள்பட 319 மாணவிகள் பட்டங்களை பெற்றனர். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.