< Back
மாநில செய்திகள்
தண்டனை கைதி திடீர் சாவு
திருச்சி
மாநில செய்திகள்

தண்டனை கைதி திடீர் சாவு

தினத்தந்தி
|
21 March 2023 2:59 AM IST

தண்டனை கைதி திடீரென உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் கீரனூர் வயலப்பாடி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 77). இவர் கடந்த 2019-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம், குன்னம் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக சிறை காவலர்கள் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்