< Back
மாநில செய்திகள்
மரபுசார் பன்முகத்தன்மை கருத்தரங்கம்
திருவாரூர்
மாநில செய்திகள்

மரபுசார் பன்முகத்தன்மை கருத்தரங்கம்

தினத்தந்தி
|
14 March 2023 12:15 AM IST

மரபுசார் பன்முகத்தன்மை கருத்தரங்கம்

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் மரபுசார் பன்முகத்தன்மை கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சை தேசிய உணவு தொழில் நுட்ப நிறுவன தொழில் முனைவு- மேலாண்மை இயக்குனர் லோகநாதன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் 50 விற்பனை அரங்கங்கள் இருந்தன. இதில் பி.பி. எப். எம். கரைசல், வான்கல தெளிப்பு- டிரோன், நிலக்கடலை விதைப்பு எந்திரம், தென்னை டானிக், எந்திரம் மூலம் கலை மேலாண்மை, வரிசையில் நெல் விதைக்கும் உருளைக்கருவி உள்ளிட்ட செயல் விளக்கங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேளாண்மை குறித்து பல்வேறு தலைப்புகளில் வேளாண் விஞ்ஞானிகள் பேசினர். சேவை பணியாற்றிய பி. ஜி. ஆர். ஆர். மருத்துவ குழுவினர், துப்புரவு பணியாளர்கள், தேசிய சமூக சேவை தொண்டர்கள், கண்காட்சி மற்றும் விற்பனை அரங்கங்கள் அமைத்த நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கு திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் சான்றிதழ்- நினைவு பரிசு வழங்கினார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் இணை பேராசிரியர் கமலசுந்தரி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்