< Back
மாநில செய்திகள்
குரூப் 2 தேர்வில் கவர்னர் குறித்து சர்ச்சை கேள்வி
மாநில செய்திகள்

குரூப் 2 தேர்வில் கவர்னர் குறித்து சர்ச்சை கேள்வி

தினத்தந்தி
|
14 Sept 2024 4:35 PM IST

குரூப் 2 தேர்வில் கவர்னர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்பட பல்வேறு போட்டித்தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 2 ஆயிரத்து 763 தேர்வு மையங்களில் நடந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் கவர்னர் குறித்து சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

குரூப் 2 வினாத்தாளில், கூற்று A. இந்திய கூட்டாட்சியில் ஆளுநர் அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இருவிதமான பணிகளை செய்கிறார். காரணம் (R). ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது.

A. கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறானது.

B. கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. மேலும் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) உள்ளது.

C. கூற்று (A) தவறானது. ஆனால் காரணம் (R) சரி.

D. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி.. ஆனால் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) இல்லை.

E. விடை தெரியவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இந்த வினாத்தாள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு, கவர்னர் இடையே தொடரும் மோதல் போக்கிற்கு மத்தியில், குரூப் 2 தேர்வில் சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது. முன்னதாக, சனாதனம் குறித்து பேசியவர்கள், தற்போது அமைதியாகி விட்டார்கள் என கவர்னர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதியை இன்று மறைமுகமாக சீண்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்