< Back
மாநில செய்திகள்
வாணியம்பாடியில் அரசின் அறிவிப்பை மீறி தண்டோரா போட்டதால் சர்ச்சை
மாநில செய்திகள்

வாணியம்பாடியில் அரசின் அறிவிப்பை மீறி தண்டோரா போட்டதால் சர்ச்சை

தினத்தந்தி
|
21 Aug 2022 10:29 PM IST

தண்டோரா போடும் வழக்கத்தை தொடர வேண்டியதில்லை என தமிழக அரசு அறிவித்திருந்தது.

திருப்பத்தூர்,

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில் தண்டோரா போடும் வழக்கத்தை தொடர வேண்டியதில்லை எனவும், வாகனங்களில் ஒலிபெருக்கியை பொருத்தி அதன் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தகவல்களை கொண்டு சேர்த்திட முடியும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சியில் தடுப்பூசி முகாம் குறித்த செய்தியை ஊராட்சி நிர்வாகத்தினர் தண்டோரா மூலம் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்