< Back
மாநில செய்திகள்
சர்ச்சை கருத்து: அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு
மாநில செய்திகள்

சர்ச்சை கருத்து: அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு

தினத்தந்தி
|
7 Dec 2022 9:18 PM IST

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கோவை,

கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் சம்பத். இவர் இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவராக உள்ளார். இவர் இரு மதத்துக்கும் இடையே மோதல் ஏற்படும் வகையில் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் அர்ஜூன் சம்பத் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதுபோன்று கோவையை சேர்ந்த தடா ரகீம் என்பவர் அர்ஜூன் சம்பத் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு இருந்தார். இது குறித்த புகாரின்பேரில் தடா ரகீம் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்