< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சனாதனம் பற்றி சர்ச்சை பேச்சு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மராட்டிய போலீசார் வழக்குப்பதிவு
|14 Sept 2023 8:18 AM IST
சனாதனம் பற்றி சர்ச்சை பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மராட்டிய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'சனாதன தர்மம்' குறித்து பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் டெல்லி உள்ளிட்ட சில மாநில போலீஸ் நிலையங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மிரா ரோடு போலீசில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்தார். அவரது பேச்சு சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களின் உணர்வுகளையும், மத உணர்வுகளையும் புண்படுத்தி இருப்பதாக அவர் புகாரில் தெரிவித்து இருந்தார்.
அதன்பேரில் மிராரோடு போலீசார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, வேண்டும் என்றே மத நம்பிக்கைகளை அவமதித்து உணர்வுகளை தூண்டுதல், இரு பிரிவினர் இடையே பகைமையை ஊக்குவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.