< Back
மாநில செய்திகள்
சர்ச்சைப் பேச்சு - முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்குப் பதிவு
மாநில செய்திகள்

சர்ச்சைப் பேச்சு - முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்குப் பதிவு

தினத்தந்தி
|
22 Feb 2023 12:24 PM IST

ராணுவ வீரர் கொலையை கண்டித்து பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மிரட்டும் தொணியில் பேசிய கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கிருஷ்ணகிரியில் ராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் பாஜக பட்டியலின அணி நிர்வாகி தடா பெரியசாமி கார் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று திருவல்லிக்கேணியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் ராணுவ அதிகாரி பாண்டியன் என்பவர் எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும் துப்பாக்கியால் சுடவும்தெரியும் என மிரட்டும் தொணியில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும் என்பதால் தமிழக அரசை எச்சரிக்கிறேன் என்றும் எங்களை அந்த நிலைக்குத் தள்ளிவிட வேண்டாம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாண்டியன் இனிமேலும் இது நடந்தால் நாங்கள் செய்வோம் எனவும் கூறினார்.

இதனையடுத்து ராணுவ அதிகாரி பாண்டியன் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்