< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பெரியார் சிலை குறித்த சர்சை பேச்சு: கனல் கண்ணன் ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு
|27 Aug 2022 1:51 PM IST
பெரியார் சிலை குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை,
பெரியார் சிலை உடைப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக கனல் கண்ணன் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15-ம் தேதியன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் அவர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
கனல் கண்ணனின் ஜாமின் மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது.