< Back
மாநில செய்திகள்
நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து:காங் மாவட்ட தலைவர் விளக்கம் அளிக்க மாநில தலைமை உத்தரவு
மாநில செய்திகள்

நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து:காங் மாவட்ட தலைவர் விளக்கம் அளிக்க மாநில தலைமை உத்தரவு

தினத்தந்தி
|
9 April 2023 9:09 PM IST

ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் நாக்கை அறுப்பேன் என பேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்க கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

திண்டுக்கல் மாவட்ட தலைவர் மணிகண்டனுக்கு, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 6-ந் தேதி திண்டுக்கல் மாநகரில் எஸ்.சி.துறை சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதியின் நாக்கை அறுப்பேன் என தாங்கள் பேசியதாக பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தெரியவந்தது.இது, காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணானது. எனவே, தாங்கள் ஏன் இவ்வாறு பேசினீர்கள்? என்பதற்கு தகுந்த விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்