< Back
மாநில செய்திகள்
கட்டுப்பாட்டு அறை, புறக்காவல் நிலையம் திறப்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கட்டுப்பாட்டு அறை, புறக்காவல் நிலையம் திறப்பு

தினத்தந்தி
|
11 March 2023 12:15 AM IST

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் கண்காணிப்பு கேமரா போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய புறக்காவல் நிலையத்தினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை திறந்து வைத்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் கண்காணிப்பு கேமரா போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய புறக்காவல் நிலையத்தினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை திறந்து வைத்தார்.

கட்டுப்பாட்டு அறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் வகையிலும் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்தந்த துணை கோட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் இதற்கு முன்னர் இருந்து வந்த புறக்காவல் நிலையம் பழுதடைந்து விட்டதால் சமீப காலமாக செயல்படாமல் இருந்து வந்தது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் ராமநாதபுரம் ஆனந்தம் சில்க்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் புதிய புறக்காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

புறக்காவல் நிலையம் திறப்பு

இந்த புறக்காவல் நிலையத்தில் ராமநாதபுரம் நகரில் உள்ள முக்கிய வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு உரிய உத்தரவுகளை வழங்கினார்.

. நிகழ்ச்சியில், ஆனந்தம் சில்க்ஸ் இயக்குனர் கணேஷ், ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருதுபாண்டி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்