காஞ்சிபுரம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் தகவல்
|கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில், காஞ்சீபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாசில்தார் அலுவலகங்கள் உள்ளன.
தாசில்தார் அலுவலகங்களில் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெற, சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு பொது வினியோக ரேஷன்கடைகள், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், இ-சேவை மையங்கள், வாக்குச்சாவடி மையங்கள், சமுதாய கூடங்கள் போன்ற இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
காஞ்சீபுரம் மாவட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்தவற்கான முகாம்கள் நடைபெறும் இடங்கள் பற்றி அறியவும், விண்ணப்பங்கள் தொடர்பான சந்தேகங்களை பூர்த்தி செய்ய ஏதுவாகவும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டு அறைகளின் விவரங்கள் பின்வருமாறு:
மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்கள், தொடர்பு எண்கள்:
மாவட்ட கலெக்டர் அலுவலகம் 044-27237107, 044-27237207,
காஞ்சீபுரம் வட்டம் 044-27222776,
வாலாஜாபாத் வட்டம் 044-27256090,
உத்திரமேரூர் வட்டம் 044-27272230,
ஸ்ரீபெரும்புதூர் வட்டம் 044-27162231,
குன்றத்தூர் வட்டம் 044-24780449.