< Back
மாநில செய்திகள்
வீடு கட்டித்தர தாமதம் ஆனதால் ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவு; நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வீடு கட்டித்தர தாமதம் ஆனதால் ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவு; நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
25 Sept 2022 5:10 PM IST

வீடு கட்டித்தர தாமதம் ஆனதால் ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க ஒப்பந்ததாரருக்கு நுகர்வோர் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வல்லம் ஊராட்சிக்குட்பட்ட அம்மனம்பாக்கம், கொள்ளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிகிருஷ்ணன். பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த இவர், கடந்த 2019-ம் ஆண்டு பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் வீடு கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அவருக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கி வீடு கட்ட ஆவணம் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.1 லட்சம் முன்பணம் கொடுத்து வீடு கட்டும் பணியினை ரவிகிருஷ்ணன் ஒப்படைத்தார். ஆனால் இதுவரை தனியார் கட்டுமான ஒப்பந்ததாரர் ரவிக்கிருஷ்ணனுக்கு வீடு கட்டிக்கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மன உலைச்சலுக்கு ஆளான ரவிகிருஷ்ணன் செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று வழங்கிய தீர்ப்பில் ரவிகிருஷ்ணனுக்கு. உடனடியாக வீடு கட்டிகொடுக்கவும், மன உளைச்சலுக்குள்ளான ரவிகிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்