< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம்
|22 Oct 2022 1:00 AM IST
மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
மேட்டூர்:-
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் அனல் மின் நிலைய நுழைவுவாயில் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அவர்கள் 2-வது நாளாக அனல் மின் நிலையத்தின் பிரதான நுழைவுவாயில் கேட் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அனல் மின் நிலையத்துக்குள் அதிகாரிகள், பணியாளர்கள் வெளியே செல்ல முடியாமலும், உள்ளே செல்ல முடியாமலும் சிரமப்பட்டனர். தகவல் அறிந்து வந்த மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் கருமலைக்கூடல் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை.