< Back
மாநில செய்திகள்
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி
மாநில செய்திகள்

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி

தினத்தந்தி
|
2 July 2024 12:10 PM IST

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் அமைந்திருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்களை ஏவி வருகிறது. இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்த ஊர், புவி வட்டப் பாதைக்கு மிக அருகிலும், ராக்கெட் ஏவுதளம் இயங்க தட்பவெப்ப சூழல் சாதகமாகவும் உள்ளதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, குலசேகரபட்டினம் அருகில் உள்ள கூடல் நகர் அமராபுரம், மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 2,230 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதையடுத்து குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சேவை மையம், ராக்கெட் ஏவுதளம், ஏவுதள அடித்தளக் கட்டமைப்பு போன்றவற்றை அமைக்க ஒப்பந்தம் ; சுமார் ரூ.20 கோடியில் கட்டமைப்புகளை மேம்படுத்த 22 நாட்களில் ஒப்பந்தப்புள்ளியை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்