< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடைகளுக்கு தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களுடன் மீண்டும் ஒப்பந்தமா? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளுக்கு தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களுடன் மீண்டும் ஒப்பந்தமா? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்

தினத்தந்தி
|
1 Oct 2022 8:05 PM IST

அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் ரேஷன் பொருட்களுக்கான ஆர்டர் கொடுக்க முடிவு செய்திருந்தால், அதை மக்கள் நீதி மய்யம் கடுமையாக கண்டிக்கிறது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தின்போது, தரமற்றப் பொருட்களை விநியோகித்ததாக 6 நிறுவனங்களுக்கு ரூ.3.75 கோடி அபராதம் விதித்து அரசு உத்தரவிட்டது. குறிப்பாக, 3 நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதே நிறுவனங்களுக்கு மீண்டும் ரேஷன் பொருட்களை வழங்க ஒப்பந்தம் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. சுமார் 4 கோடி லிட்டர் பாமாயில், ஒரு லட்சம் டன் பருப்பு விநியோகிக்க அந்த நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் ரேஷன் பொருட்களுக்கான ஆர்டர் கொடுக்க முடிவு செய்திருந்தால், அதை மக்கள் நீதி மய்யம் கடுமையாக கண்டிக்கிறது. மக்களுக்கு தரமான ரேஷன் பொருட்களை விநியோகிப்பதிலும், அதில் ஊழல் இல்லாமல் பார்த்துக் கொள்வதிலும் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளது.


மேலும் செய்திகள்